தனிநடனம்
தனிநடனம் (அ, ஆ என இரு பிரிவுகளாக நடாத்தப்படும்)
பிரிவு அ: 7 வயது தொடக்கம் 12 வயது வரை
பிரிவு ஆ: 13 வயதும் அதற்கு மேற்பட்டோரும்

 • போட்டியாளர் சினிமாப்பாடல் / மேற்கத்தைய இசை அல்லது தாயகப் பாடல் ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டும்.
 • இவர் குழுநடனம், இருவர் நடனம், அக்கினித்தாண்டவம் ஆகிய நடனங்களில் மேலதிகமாகப் போட்டியிடலாம்.
 • பிரிவு அ: 03 – 05 நிமிடங்களுக்கு இடைப்பட்டதாக தனது நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிரிவு ஆ: 04 – 06 நிமிடங்களுக்கு இடைப்பட்டதாக தனது நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இருவர் நடனம்

 • போட்டியாளர் சினிமாப்பாடல் / மேற்கத்தைய இசை அல்லது தாயகப் பாடல் ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டும்.
 • இவர்கள் தனிநடனம், குழுநடனம்;, அக்கினித்தாண்டவம் ஆகிய நடனங்களில் மேலதிகமாகப் போட்டியிடலாம்.
 • 05 – 08 நிமிடங்களுக்கு இடைப்பட்டதாக தனது நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குழு நடனம்

 • போட்டியிடும் குழு சினிமாப்பாடலுக்கு அல்லது மேற்கத்தையப் பாடலுக்கு நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு குழு, ஒன்றிற்கு மேற்பட்ட குழு நடனப் போட்டியில் பங்குபற்ற முடியாது.
 • இக் குழுவில் இடம் பெறுவோர் தனிநடனம், இருவர் நடனம் அக்கினித்தாண்டவம் ஆகிய நடனப் போட்டிகளில் பங்குபற்றலாம்.
 • குழு நடனத்தில் பரத நாட்டிய நடனத்தை தவிர்க்க வேண்டும்.
 • குழு நடனத்தில் 04 – 12 பேர் பங்குகொள்ள வேண்டும்.
 • 06 – 10 நிமிடங்களுக்கு இடைப்பட்டதாக தமது நிகழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

விடுதலைத்தீ (பெண்கள்)

 • விடுதலைத்தீ பெண்களுக்கான போட்டி நிகழ்வாகும்.
 • இப்போட்டி நிகழ்வில் தமிழீழ எழுச்சிப்பாடல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • மேற்கத்தேய நடன அசைவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
 • பரத நாட்டிய அசைவுகள் சேர்க்கப்பட வேண்டும்.
 • குழுவின் பெயர் பரதாஞ்சலி பாடசாலையின் பெயராக இருக்கலாகாது.
 • எழுச்சிநடனம் நடனத்தில் 04 – 12 பேர் பங்குகொள்ள வேண்டும்
 • 08 – 12 நிமிடங்களுக்கு இடைப்பட்டதாக தமது நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அக்கினித்தாண்டவம்

 • ஈழத்தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • தாயகப் பாடல் இசை இசையை பயன்படுத்தலாம்.
 • அல்லது சுய தயாரிப்புடனான இசையை பயன்படுத்தலாம். இதை நிகழ்ச்சி பொறுப்பாளருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.
 • சில சினிமாப் பாடல்கள் மட்டும் இணைக்க அனுமதி உண்டு, இதை நிகழ்ச்சி பொறுப்பாளருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.
 • மேற்கத்தைய இசை (பாடல் இன்றி) சேர்க்கப்படலாம். இதை நிகழ்ச்சி பொறுப்பாளருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.
 • அக்கினித்தாண்டவ நடனத்தில் 04 – 12 பேர் பங்குகொள்ள வேண்டும்.
 • 08 – 12 நிமிடங்களுக்கு இடைப்பட்டதாக தமது நிகழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து போட்டி நிகழ்வுகளிலும் பங்குபற்றுவோர் கவனத்திற்கொள்ள வேண்டிய பொது விதிமுறைகள்

 • போட்டியில் கலந்துகொள்வோர் மதுபானம் பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. நடுவர்கள் மது போதையில் போட்டியாளர்களை இனம்கானும் பட்சத்தில் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர். அத்துடன் போட்டிக்கட்டணம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது.
 • ஆபாச உடைகள், பாடல்கள், நடன அசைவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
 • போட்டியாளர்கள் மண்டபத்திற்கு காலை 11:00 மணிக்கு முன்பதாகச் சமூகமளிக்க வேண்டும். நிகழ்வு முன் ஆரம்பிக்குமாயின் மண்டபத்தில் நீங்கள் சமூகமளிக்க வேண்டிய நேரம் பின் அறிவிக்கப்படும்
 • தமது நிகழ்விற்கான இசை பாடல்களை இறுவெட்டு வடிவில் 30.09.2017, 23:59 மணிக்கு முன் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
 • நடனப் போட்டியில் பங்குபற்ற பதிவு செய்தோர், பங்குபெற முடியாத பட்ச்சத்தில் 30.09.2017க்கு முன்னர் எமக்கு அறியத்தரவேண்டும். தகுந்த காரணமின்றி நடனப் போட்டியில் பங்குபெறாத சந்தர்ப்பத்தில் கட்டுப்பணம் செலுத்தப்படவேண்டும்.
 • நடனப் போட்டியில் மேடையில் பங்குபற்றும் கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு இலவசம்.

தாயகப் பாடலுடன் சினிமாப் பாடலை இணைத்து நடனம் அமைப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
(சில சினிமாப் பாடல்கள் மட்டும் இணைக்க அனுமதி உண்டு, இதை நிகழ்ச்சி பொறுப்பாளருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்)

 

Preise Schweiz andere Länder

தனிநடனம் (அ ) Fr. 30.00 Euro. 20.00
தனிநடனம் (ஆ) Fr. 40.00 Euro. 30.00
இருவர் நடனம் Fr. 60.00 Euro. 50.00
குழுநடனம் Fr. 120.00 Euro. 120.00
அக்கினித்தாண்டவம் Fr. 100.00 Euro. 100.00
எழுச்சிநடனம் (பெண்கள்) Fr. 100.00 Euro. 100.00
குழுநடனம் & அக்கினித்தாண்டவம் Fr. 150.00 Euro. 150.00